Mookuthi Amman 2 Pooja (Photo Credit: @rameshlaus X)

மார்ச் 06, சென்னை (Cinema News): வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் (Vels Film International) தயாரிப்பில், ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman). மிகக்குறைந்த பட்சத்தில் தயாரான இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றைய சாமியார்களின் நிலையை, கடவுளே வந்து மனிதரின் உதவியுடன் தட்டிக்கேட்பது தொடர்பான காட்சிகள் பாராட்டுகளை பெற்று இருந்தன.

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம்:

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. அதனை உறுதி செய்யும் அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள வேல்ஸ் பிலிம் அலுவலகத்தில், இன்று மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படத்தின் பூஜை போடப்பட்டது. ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்து வழங்கும் இப்படத்தை, நடிகர் & இயக்குனர் சுந்தர் சி (Sundar C) இயக்கி வழங்குகிறார். Singer Kalpana Suicide Attempt: பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. ரசிகர்கள் ஷாக்..! 

ஹிப் ஹாப் இசை:

முதற்கட்டமாக நயன்தாரா (Nayanthara) மட்டும் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பு பணிகளை ஹிப் ஹாப் தமிழா ஆதி (Hiphop Tamizha) மேற்கொள்கிறார். ஏற்கனவே சுந்தர் சி அரண்மனை படத்தின் பல பாகங்களை இயக்கி வழங்கி வெற்றி கண்டுள்ளார். இதனால் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பூஜை விழாவில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஆம்பள, கலகலப்பு 2, அரண்மனை 2 & 4 ஆகிய பாகங்களுக்கு சுந்தர் சி - ஹிப்ஹாப் கூட்டணி இணைந்து, தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தொடர்கிறது.

மூக்குத்தி அம்மன் 2 பூஜை வீடியோவை இங்கு காணவும் (Mookuthi Amman 2 Pooja):