Rajinikanth | New Year 2025 Wish (Photo Credit: @Rajinikanth X / Pixabay)

ஜனவரி 01, போயஸ் கார்டன் (Cinema News): 2024ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, உலகம் முழுவதும் உள்ள நாடுகள் 2025 புத்தாண்டை (2025 New Year) வரவேற்றுள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் கடந்த ஆண்டில் பெற்ற அனுபவங்களைப் பொறுத்து, இன்று தங்களின் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். இன்றைய நாளின் சூரிய உதயமும், ஒவ்வொருவருக்கும் இனிய பாதையை அமைத்துத்தர லேட்டஸ்ட்லி தமிழும் (LatestLY Tamil) வாழ்த்துகிறது. பலரும் தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வைக்கின்றனர். New Year 2025: புத்தாண்டை முதல் நாடாக வரவேற்ற டோங்கா, கிரிபாட்டி.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.! 

புகழ்பெற்ற ரஜினி வசனத்தில் புத்தாண்டு வாழ்த்து:

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், சூப்பர்ஸ்டாராகவும் அறியப்படும் ரஜினிகாந்த் தனது புத்தாண்டு 2025 வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக பதிவு செய்துள்ள ட்விட் பதிவில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில், மிகப்பெரிய வெற்றியை அடைந்த பாட்ஷா (Baashha) படத்தில் இந்த வசனம் இடம்பெற்று இருக்கும். ரஜினியின் வசனங்களில் இது மக்களின் மனதில் இன்றளவும் நினைவில் இருக்கிறது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது வசனத்தை குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயம் அவர் மறைமுகமாக ஏதேனும் கருத்து சொல்ல வருகிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் புத்தாண்டு வாழ்த்துப் பதிவு: