டிசம்பர் 31, டோங்கா (World News): பசுபிக் பெருங்கடலில், பாலினேஷியா (Polynesia) தீவுக்கூட்டங்களில் அமைந்துள்ள டோங்கா நகரம், சர்வதேச அளவில் கவனிக்கப்படும் தீவுக்கூட்டங்களின் தலைநகரம் ஆகும். டோங்கா, சோமா, கிரிப்பதி (Tonga, Samoa, Kiribati) ஆகிய நகரங்கள் உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை கொண்டாட உலகமே தயாராக இருக்கும்போது, மேற்கூறிய தீவுக்கூட்ட நாடே முதல் முதலாக புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைக்கும். New Year's Eve 2024: "பிறக்கிறது புத்தாண்டு.. பெருமையுடன் கொண்டாடு.." புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!
பிறந்தது புத்தாண்டு:
அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கு உலகமே விடைகொடுக்கத் தயாராகி, 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு பாலினேஷியா தீவுக்கூட்டத்தில் தலைநகராக இருக்கும் டோங்காவில் புத்தாண்டு 2025 பிறந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அங்கு வான வேடிக்கை உட்பட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அவை மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்திய நேரப்படி மாலை 03:30 மணிக்கு அங்கு நள்ளிரவு 12 மணி ஆகும். தற்போது அங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன.