YouTuber Ranveer Allahbadia (Photo Credit: @IRONSIDE_____ X)

பிப்ரவரி 11, மும்பை (Cinema News): பிரபல யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை வைத்து, சமய் ரெய்னா என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் 'இந்தியாஸ் காட் லேட்டண்ட்' (India's Got Latent) என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா (Ranveer Allahbadia) என்பவர், பெற்றோரின் உடலுறவு குறித்து ஆபாசமான வகையில் பேசியிருந்தார். அவரது இந்த சர்ச்சையான பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சமூக வலைதளத்தில் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.  Suzhal 2: ரசிகர்கள் எதிர்பார்த்த 'சுழல்' 2 வெப் சீரிஸ்; ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

யூடியூபர் சர்ச்சை பேச்சு:

இதனையடுத்து, அசாம் மாநிலம் கவுகாத்தியில் யூடியூபர்கள் சமய் ரெய்னா மற்றும் ரன்வீர் அல்லாபாடியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ச்சை பேச்சுக்கு ரன்வீர் பகிரங்க மன்னிப்பும் கேட்டார். இதனிடையே, இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக சமய் ரெய்னாவின் யூடியூப் பக்கத்தின் மீது மத்திய அரசு புகார் அளித்தது. மத்திய அரசின் புகாரை அடுத்து, சர்ச்சைக்கு உள்ளான இந்தியாஸ் காட் லேட்டண்ட் என்ற நிகழ்ச்சியின் சமீபத்திய வீடியோ பதிவை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.