பிப்ரவரி 11, சென்னை (Cinema News): விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம்  இயக்குனர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் - காயத்ரி. இவர்களது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், சந்தானபாரதி, கதிர், பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி வெளியான அமேசான் பிரைமில் இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம் (Suzhal The Vortex Season 2) வரும் பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை புஷ்கர் - காயத்ரி தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். Allu Arjun & Atlee Kumar: அட்லீ - அல்லு அர்ஜுன் காமினேஷனில் உருவாகும் படம்.. தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா? வெளியான சுவாரஷ்ய தகவல்.!

சுழல் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)