ஜூலை 07, சென்னை (Cinema News): கன்னடம், தமிழ் உட்பட 6 மொழிகளில் உருவாகி, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா: சாப்டர் 1 (Kantara: Chapter 1) பிரமாண்டமான அளவில் தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தயாரிப்பாளர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். Ketika Sharma: எப்போதும் கவர்ச்சி தானா?.. சட்டை பட்டனை கழட்டி போட்டோ வெளியிட்ட நடிகை.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!
காந்தாரா: சாப்டர் 1 பர்ஸ்ட் லுக்:
அதில், அவர் போர் வீரராக மற்றும் ஒரு கையில் கேடயத்தை ஏந்தியபடியும், அவரின் பின்புறம் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பான் இந்திய அளவில் உருவாகி இருக்கும் காந்தாரா: சாப்டர் 1 பெங்காலி மொழியிலும் தயாராகி வருகிறது. இதன்மூலம், இப்படம் அதிகளவில் மக்களை சென்றடையும். வரும் அக்டோபர் 02ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
காந்தாரா: சாப்டர் 1 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு:
Where legends are born and the roar of the wild echoes… 🔥#Kantara – A prequel to the masterpiece that moved millions.
Wishing the trailblazing force behind the legend, @shetty_rishab a divine and glorious birthday.
The much-awaited prequel to the divine cinematic… pic.twitter.com/EuAdZfna4U
— Kantara - A Legend (@KantaraFilm) July 7, 2025