Actor Mammootty Kalamkaval Movie (Photo Credit: @mammukka X)

ஆகஸ்ட் 18, சென்னை (Cinema News): தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் மம்மூட்டி (Actor Mammootty) நடிப்பில் சமீபத்தில் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ், பசூக்கா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ஜித்தின் கே. ஜோஷின் புதிய படத்தில் மம்மூட்டி நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'களம்காவல்' (Kalamkaval Movie) என பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Blue Sattai Maran Coolie Review: ஒரே வீடியோல மொத்தமா காலி.. கூலி படத்தை முடித்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.!

களம்காவல் திரைப்படம்:

இது கிரைம் திரில்லர் படமாக வெளிவரும் என்றும், இந்த ஆண்டின் இறுதியில் இப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் மம்மூட்டி அதனை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

களம்காவல் திரைப்படத்தின் புதிய போஸ்டர்: