Gangers Trailer (Photo Credit: YouTube)

ஏப்ரல் 01, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகர் வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ (Gangers) படம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. ‘அரண்மனை 4’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’ படம் மூலம், நீண்ட வருடங்கள் கழித்து சுந்தர்.சி - வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது. Agent Sardar is Back: சர்தார் 2 படத்தின் முதற்பார்வை அப்டேட்; படக்குழு அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!

கேங்கர்ஸ் பட டிரெய்லர்:

இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்து தயாரித்திருந்தாலும், ‘கேங்கர்ஸ்’ சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும், கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார். தற்போது, கேங்கர்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கேங்கர்ஸ் பட டிரெய்லர் இதோ: