Salmanul To Marry Megha Mahesh (Photo Credit: Instagram)

பிப்ரவரி 07, சென்னை (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மௌன ராகம் (Mounaragam). முதல் பக்கத்தில் சிறுவர்களாக எடுத்து பின்னர் வளர்ந்த பிறகு வரும் கதையை 2ம் பாகமாக எடுத்து வெளியிட்டார்கள். மௌன ராகம் சீரியல் முடிவடைந்த பிறகு அந்த தொடர் ஹீரோ மலையாளத்தில் ஒளிபரப்பான மிழி ரண்டிலும் என்கிற சீரியலில் சல்மானுல் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக தான் மேகா மகேஷ் நடித்து வருகிறார். Vidaamuyarchi Movie Review: விடாமுயற்சி வெற்றி பாதையா? தோல்வி யாத்திரையா? விடாமுயற்சி விமர்சனம் இதோ.!

சீரியல் ஜோடி இப்போ ரியல் ஜோடி:

அவர்கள் நடித்த காதல் காட்சிகளுக்கு கேரள ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். அந்த பதிவில், மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சஞ்சு முதல் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ஆகி உள்ளோம். எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, அக்கறை, ஏற்ற இறக்கங்கள், துன்பங்கள், பயணங்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.