Bigg Boss Tamil Season (Photo Credit: @VijayTelevision X)

டிசம்பர் 09, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Pushpa 2 Review: புஷ்பான்னா பூவா? இல்ல காட்டுத்தீதானா? புஷ்பா விமர்சனம் இதோ..!

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரொமோ வீடியோவில், என்ன மூளை இல்லை. அவனுக்கு கிளாஸ் எடுங்க, புரிஞ்சுக்காம பேசுறானு சொன்னது என அருண் பிரசாத் கோபமாக பேசுவதுடன் துவங்கியிருக்கிறது. மூளை இல்லைனு சொன்னது மாக் பண்ண மாதிரி எனக்கு தெரியவில்லை. உங்ககூட ஒரு ஆர்கியூமென்ட் தான் வச்சிருக்காங்க என கூலாக சொன்னார் ரயான். அதை கேட்ட அருணோ, அப்போ கிளாஸ் எடுங்கனு சொல்றது என்ன என சீறினார். அது மாக்கிங்கே கிடையாது ப்ரோ என ரயான் சொல்ல, எனக்கு மாக்கிங் தான் என அருண் சொன்னார். அது மாக்கிங் இல்லைனு நீங்க தான் ப்ரோ போன வாரம் வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தீங்க என ரயான் சொன்னதை கேட்டு அப்படியே ஷாக் ஆகிவிட்டார் அருண் பிரசாத். நீ இரு ரயான், இந்தா நான் வாரேன் என முத்துக்குமரன் வந்துவிட்டார். மாக்கிங்குக்கு நீங்க தான் ஒரு கிளாரிட்டி கொடுத்தீங்க. இன்னைக்கு கிளாரிட்டி மாத்திட்டீங்களா என கேட்டார் முத்துக்குமரன். மூளை இல்லை என அருண் அடுக்க, மாக்கிங் என்கிறீர்களா என கேட்டார் மஞ்சரி. ஒரு கான்வர்சேஷன் வந்தால் நீங்க ப்ரொவோக் ஆகிடுறீங்க அருண். அப்ப நீங்க வக்கிற ஸ்டேட்மென்ட் எல்லாமே பார்க்கிறதுக்கு வேற மாதிரி போயிடுது என்றார் முத்துக்குமரன்.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: