Actor Ranjith | Vijay Sethupathi (Photo Credit: @BhimROCKY X)Actor Ranjith | Vijay Sethupathi (Photo Credit: @BhimROCKY X)

அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 இன்று முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், போட்டியாளர்கள் அடுத்தடுத்து வீட்டிற்குள் நுழைந்தனர். முதற்கட்டமாக ரவீந்திரன், சத்யா, தீபக், சாச்சனா, ஆனந்தி, தர்ஷா ஆகியோர் பிக் பாஸ் இல்லத்திற்குள் முதல் ஆறு போட்டியாளராக சென்று இருந்தனர். இவர்கள் அனைவரும் முதலில் வீட்டின் கார்டன் அறையில் இருந்தனர். அவர்களை வைத்து பிக் பாஸ் தனது முதல் ஆட்டத்தை தொடங்கினார். இவர்களுக்குப்பின் சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித் ஆகியோர் அடுத்தடுத்து பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்று இருந்தனர்.

நடிகர் ரஞ்சித்:

போட்டியாளர்கள் அறிமுகத்தின்போது, அவர்களிடம் தொகுப்பாளர் விஜய் சேதுபதி அனைத்து கேள்விகளையும் கேட்டு மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்திருந்தார். இதனிடையே, நடிகர் ரஞ்சித் பேசும்போது விவசாய பின்னணி குடும்பத்தை சேர்ந்த நான் பல திரைப்படங்களில் நடித்துள்ளேன், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளேன். தற்போது பிக் பாஸ் குடும்பத்துடன் இணைந்துள்ளேன் என பேசினார். Bigg Boss Tamil Season 8: முதல் நாளே பிக் பாஸை டென்ஷனாக்கி, தூக்கியடிக்கப்பட்ட 6 போட்டியாளர்கள்.. அதிரடி சம்பவம்.! 

விஜய் சேதுபதி கேள்வி:

அப்போது குறுக்கிட்ட நடிகர் விஜய் சேதுபதி, என்னை உங்களுக்கு ஏற்கனவே தெரியும், இயக்குனராக நீங்கள் நல்ல படைப்புக்கள் வழங்கி இருந்தீர்கள். ஆனால், அன்று இருந்த ரஞ்சித் வேறு, கவுண்டம்பாளையத்தை இயக்கி வழங்கிய ரஞ்சித் வேறு என்பதை நான் உணர்கிறேன் என பேசினார். இதற்கு பதிலளித்த நடிகர் ராஜித கவுண்டம்பாளையம் படத்திற்கு பின் பார்த்தபோது மாற்றம் தெரிந்தது உண்மைதான். அதனால் வருத்தப்பட்டேன். அதனால் ஏற்பட்ட தவறை உணர்ந்துகொண்டேன். கலை எனக்கு நல்ல பாடத்தை பயிற்றுவித்தது என கூறினார்.

கவுண்டம்பாளையம் விமர்சனம்:

நாடக காதல் என்ற வார்த்தையை வைத்து, காதல் செய்வோரை ஆணவக்கொலை செய்யலாம் என சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் ரஞ்சித் பேசி இருந்தார். இந்த வார்த்தைகள் தமிழகமெங்கும் மிகப்பெரிய அதிரவலையை உண்டாக்கியது. அவரின் நடிப்பில் வெளியான பீஷ்மர் திரைப்படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி, அந்த படத்தில் பார்த்த ரஞ்சித் இப்போது இல்லையே என தொடக்கத்திலேயே வறுத்தெடுத்தார்.

பிக் பாஸ் இல்லத்திற்குள் ரஞ்சித்:

ரஞ்சித்தை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி: