செப்டம்பர் 16, சென்னை (Television News): தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற வருகிறது. 2020ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

மணிமேகலை விலகல்: இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவில், “நான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை. நான் ஒப்பந்தம் ஆகும் நிகழ்ச்சிகளில் நூறு சதவீத முயற்சியையும், உழைப்பையும் செலுத்துவது வழக்கம். இதையே தான் கடந்த 2019 நவம்பர் முதல் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் நான் செய்தேன். ஆனால், அனைத்தையும் விட சுயமரியாதை தான் முக்கியம். புகழ், பணம், தொழில், வாய்ப்பு என அனைத்தையும் விட சுயமரியாதை முக்கியமானது. மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன்.

இந்த சீசனில் ‘குக்’ ஆக பங்கேற்றுள்ள பெண் தொகுப்பாளர், தனது பணியை செய்யாமல் தொகுப்பாளராக செயல்பட்டு, எனது பணியை செய்ய இடையூறு அளிக்கிறார். இது தொடர்பாக நான் குரல் கொடுப்பதும் குற்றமாகிறது. இது நான் முன்பு பணியாற்றிய அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியல்ல. அதனால் இனி நான் இந்த நிகழ்ச்சியில் தொடர போவது இல்லை. என்னுடைய 15 ஆண்டுகால தொகுப்பாளர் பயணத்தில் இது போன்ற சூழலை நான் சந்தித்தது இல்லை. எனக்கு இதை செய்த நபருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் அவருக்கு அதிக வாய்ப்புகளையும், அதிக நிகழ்ச்சிகளையும் தரட்டும். வாழு, வாழ விடு. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்து இருந்தார். Aditi Rao Hydari Marries Siddharth: அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்.. வைரலாகும் புகைபடங்கள்..!

மணிமேகலை வீடியோ: இது குறித்து மணிமேகலை விளக்கமாக வீடியோ தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "2009 ஆண்டு நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதே சன் மியூசிக்கில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 17 வயசு தான். அப்போதிலிருந்து இப்போ வரை சுமார் 15 ஆண்டுகள் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக குக் வித் கோமாளியில் பணியாற்றினேன். முதல் 3 சீசனில் கோமாளியாகவும், கடந்த 2 சீசன்களாக தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், இந்த சீசனில் நான் தொகுப்பாளினியாக நுழைந்த நாள் முதலில் இருந்து நேற்று வெளியேறிய நாள் வரை நிறைய பிரச்சனை சந்தித்து விட்டேன்.

நான் பேசுவதை தாண்டி எனக்கு தான் எல்லாமே தெரியும், நான் இந்த சேனலில் பெரிய தொகுப்பாளினி, நான் இதை பார்த்துக் கொள்கிறேன் என என்னுடைய வேலையில் மூக்கை நுழைத்தார். அதையும் நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் அதையும் மீறி நம்முடைய வேலையில் தலையிடுகிறார்கள் என்றால் அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியவில்லை. இதனால், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரிடம் இதுகுறித்து பேசினேன் அவர், அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை, நான் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது பாதியில் வெளிலேயே வந்ததால், என்னை அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். செய்யாத தவறுக்காக நான் என் மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி கேட்டால், இன்னும் பல ஷோக்கு என்னை தொகுப்பாளினியாக்குவதாக கூறினார்கள்.

ஆனால், எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். எனக்கு அப்படி ஒரு வேலையே வேணாம். யார் பொழப்பையும் கெடுக்க வேண்டாம்: நான் திறமை இல்லாதவள் இல்லை, எனக்கு திறமை இருக்கிறது. அப்படி வேலை கிடைக்கவில்லை என்றாலும் நான் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருவேன். யார் பொழப்பையும் கெடுக்காம இருந்தா, நமக்கு எல்லாமே நல்லதா கிடைக்கும்னு நம்புறவ நான். எப்படி விட்டாலும் நான் பொழச்சுப்பேன். அவங்க பொழப்பு நடத்த இதைவிட்டால் வேறு வழி தெரியாமல் இருக்கலாம்" என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். Ajith Kumar Buys Porsche 911 GT3: புதிய சொகுசு காரை வாங்கிய அஜித்குமார்.. விலை எவ்வளவு தெரியுமா?!

மணிமேகலை இப்பதிவை வெளியிட்டதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள் கொடி பிடித்திருக்கின்றனர். அதே சமயத்தில் அவர் பிரியங்காவின் பெயரை குறிப்பிடாமலேயே, அது பிரியங்காதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் பிரியங்கா இது பற்றி இன்னும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. பிரியங்கா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பிரியங்காவை அதிகமானோர் திட்டி தீர்த்து வருகிறார்கள்.