செப்டம்பர் 29, ஈவிபி சிட்டி (EVP Flim City): விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி (Cooku With Comali). கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தத்தால் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்களுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய புன்னகையை வழங்கி பிரம்மாண்ட அளவில் வெற்றி அடைந்தது. இதில் கிடைத்த வரவேற்பு காரணமாக, நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்த புகழ், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தையும் தவறவிட்டார். OTT And Theatrical Releases: கொட்டுக்காளி முதல் மெய்யழகன் வரை.. இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!
இறுதிப்போட்டியாளர்கள் இவர்கள்தான்:
தற்போது ஐந்தாவது சீசன் (Cook With Comali Season 5) ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 27 முதல் தொடங்கி ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் 6 பேர் மட்டும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இறுதிப்போட்டியில் சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, முகமது இர்பான், பூஜா வெங்கட், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அடுத்த மாதம் முதல் விஜய் (Vijay Television) தொலைக்காட்சியில் பிக் பாஸ் (Bigg Boss Season 8 Tamil) நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இன்று வெற்றியாளர் தெரிந்துவிடுவார்கள்:
இதனால் குக் வித் கோமாளி (Cooku With Comali 5 Final) நிகழ்ச்சி, இன்றுடன் பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன், பரபரப்பு போட்டியுடன் இறுதியை அடைகிறது. இந்த போட்டியில் நடுவராக செப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இருக்கின்றனர். நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்குகிறார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், யார் வெற்றியாளர்? என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களிடையே மட்டுமல்லாது, ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. இன்று மதியம் 01:30 மணிமுதல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இறுதியாக வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்றைய ப்ரோமோ வீடியோ உங்களின் பார்வைக்கு:
நம்ம கூட விளையாடுறதே இவங்களுக்கு வேலையா போச்சு.. 🤣
CookuWithComali5 - இன்று இரவு 9.30 மணிக்கு..நம்ம விஜய் டிவில.. #CookuWithComali5 #CWC5 #CookuWithComaliSeason5 #VijayTelevision #VijayTV pic.twitter.com/zlZ1CDIZWC
— Vijay Television (@vijaytelevision) September 28, 2024