ஜனவரி 22, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில், 25 பேருடன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது (Lorry Accident) விசாரணையில் தெரியவந்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணி கொண்டனர். Road Accident: சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதி பெண் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
உடல் நசுங்கி பலி:
இதில், 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.