
ஜூன் 27, ஜெய்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், நாகௌரில் (Nagaur) உள்ள கல்லூரி ஆசிரியர் சஹ்தேவ் (வயது 30), மாணவி கரிஷ்மா சவுத்ரி (வயது 18) என்பவருடன் 8 மாதங்கள் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் ஆசிரியர் சஹ்தேவைக் கொலை செய்தனர். இதனையடுத்து, கரிஷ்மாவே தனது குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கல்லூரி வளாகத்தில் மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கொல்கத்தாவில் மீண்டும் கொடூரம்.!
மாணவி தற்கொலை:
இதன்பிறகு, தனது லிவ்-இன் நண்பர் கொலை செய்யப்பட்ட 13 நாட்களுக்குப் பிறகு, மாணவி தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், 30 வயதான சஹ்தேவ், தனது கல்லூரி மாணவியுடன் பழகியுள்ளார். இவருக்காக கரிஷ்மா தனக்கு 18 வயது ஆனவுடன், இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதன்பிறகு, பெண்ணின் குடும்பம் சஹ்தேவை கொலை செய்துள்ளனர். இப்போது, அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.