ஜூன் 27, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவரை, 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மூன்று மாணவர்களையும் கைது செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மாணவி அளித்த புகாரின்படி, புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு மேல் சட்டக்கல்லூரி வளாகத்திலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. முதலிரவு அறைக்குள் கணவனை கதறவிட்ட மனைவி.. கண்ணீர் மல்க குமுறல்.!
பாதுகாவலரின் அறைக்குள் நடந்த கொடூரம்?
கல்லூரி வளாகத்தின் பாதுகாவலரின் அறைக்குள் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஊழியர், முன்னாள் மாணவர் உட்பட மூவரை கைது செய்த போலீசார், அவர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர்கள், மருத்துவர்கள் என பலரும் மாணவிக்காக நீதி கேட்டு போராடினர்.
தற்போது மீண்டும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.