செப்டம்பர் 09, சரன் (Bihar News): பீகார் மாநிலம், சரன் (Saran) மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் கிருஷ்ண குமார் (வயது 15). இந்த சிறுவன் பலமுறை வாந்தி எடுத்ததால், அவரது பெற்றோர் சரன் நகரில் உள்ள கணபதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர் அஜித் குமார் புரி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர், சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளது, அதனால்தான் சிறுவனுக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே யூடியூபை (YouTube Video) பார்த்து அறுவை சிகிச்சை (Surgery) மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. Expired Food On Akasa Air: காலாவதியான உணவை வழங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ்.. கொந்தளித்த பயணிகள்..!
இதனையடுத்து, சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலி மருத்துவரை (Fake Doctor) தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.