
ஜூன் 25, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரை (Kanpur) சேர்ந்தவர் ஊர்மிளா ராஜ்புத். இவரது கணவர் ஜெகதீஷ் கட்டியார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன்பிறகு, அவர் ரஞ்சித் என்பவருடன் 17 ஆண்டுகள் வசித்து வந்தார், அவர்களுக்கு 17 வயது மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மூத்த மகனை அவரது தாயார் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மகன் தனது தாயாரை கொன்றார். Trending News: திருடனின் கையை கட்டி செருப்பு மாலையுடன் ஊர்வலம்.. போலீசே இப்படி பண்ணலாமா?.!
தாய் கொலை:
இதனையடுத்து, தாயாரின் உடலை (Murder) அறையில் உள்ள படுக்கைக்குள் அவரது அடைத்து வைத்தான். இதன்பிறகு, அப்பெண்ணின் இளைய மகன் பள்ளியிலிருந்து திரும்பியபோது, வீட்டில் தனது தாயைக் காணவில்லை. அவர் தேடியபோது, படுக்கையில் ஒரு துப்பட்டா தொங்குவதை பார்த்தார். இதுகுறித்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.