Telangana Murder Case (Photo Credit : @jsuryareddy X)

ஜூன் 25, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜூடி மெட்லா ஷிபூர் நகரில் வசித்து வந்தவர் அஞ்சலி. 39 வயதாகும் இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்து மகள் இருக்கிறார். இவர் நடன கலைஞராக இருந்து வரும் நிலையில், தனது கணவர் இறந்த பின் இரண்டாவதாக மற்றொரு நபரை திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவரது இரண்டாவது கணவரும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

காதல் வயப்பட்ட மகள் :

இதனால் விரத்தியடைந்தவர் தனது மகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரின் முதல் கணவருக்கு பிறந்த மகள் அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நலகொண்டாவை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கமானது காதலாக மலரவே, இதுகுறித்து அறிந்த தாய் காதலை கைவிடுமாறு மகளிடம் கெஞ்சியுள்ளார். அறுவை சிகிச்சைக்காக சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை செய்வதாக மிரட்டி கொடூரம்.! 

தாயை கொலை செய்ய காதலனை தூண்டிய மாணவி :

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் நடந்து வந்தது. காதலுக்கு இடையூறாக இருக்கும் தாயை கொலை செய்ய முடிவு செய்த மகள், காதலனுக்கு அழைப்பு விடுத்து தாயை கொலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு முதலில் காதலன் மறுப்பு தெரிவித்தாலும், காதலியின் வற்புறுத்தலின் பேரில் கொலை செய்ய சம்மதித்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காதலனுக்கு செல்போனில் அழைப்பு விடுத்த மாணவி, காதலனையும் அவரது சகோதரரையும் வீட்டிற்குள் அனுப்பி வெளியே கொலை செய்யும் வரை கண்காணித்துள்ளார்.

உயிருக்கு போராடிய தாய் :

வீட்டிற்குள் சென்றவர்கள் காதலியின் தாய் அஞ்சலியை கயிற்றால் இறுக்கி கொலை செய்ய முற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். அவர் இறந்து விட்டதாக கருதிய காதலன் கிளம்பிய நிலையில், மாணவி உள்ளே சென்று பார்த்த போது தாய் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ந்தார்.

கயிற்றால் இறுக்கி கொலை செய்த மகளின் காதலன் :

உடனடியாக காதலனுக்கு அழைப்பு விடுத்தவர், தாயை முழுமையாக கொன்று விட்டு செல்லுமாறும் தெரிவித்துள்ளார். காதலியின் வற்புறுத்தலில் மீண்டும் வீட்டிற்கு வந்த காதலன் அவரை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். இதில் அஞ்சலி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மாணவி உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் அம்பலமான உண்மை :

போலீசாரின் விசாரணையில், மாணவி முன்னுக்கு பின் பதில் கூறியதால் சந்தேகமடைந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தியபோது, காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை காதலனை வரவழைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் மாணவி மற்றும் அவரது காதலன், காதலனின் சகோதரர் என மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாயை மகள் கொன்ற சம்பவத்தால் கதறும் உறவினர்கள் :