Surgery (Photo Credit: @NDTV X)

அக்டோபர் 07, பரேலி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பரேலி (Bareilly) மாவட்டத்தில் கர்கைனா பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தீராத வயிற்று வலி (Stomach Pain) இருந்துள்ளது. இதற்காக வீட்டிலேயே நாட்டு வைத்தியம் மேற்கொண்டு வந்தும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் பரேலி மாவட்ட மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதில் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதிக்குள் நிறைய முடி இருப்பது தெரியவந்தது. இதனைப் பார்த்த மருத்துவர்களும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் வயிற்றில் உள்ள முடியை (Hair) அகற்ற முடிவு செய்தனர். Honey Trap Case: ‘ஹனி ட்ராப்’ உஷார்.. ஆபாச வீடியோக்கள், அலறிய நபர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல் துறையினர்.!

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அந்தப் பெண் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வாரத்தில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சையும் (Surgery)செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதில் வயிற்றில் இருந்த சுமார் 2 கிலோ முடி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அந்தப் பெண்ணுக்கு உளவியல் ஆலோசனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு முடி பெண்ணின் வயிற்றுக்குள் எப்படி சென்றது என விசாரித்த போது, அவர் தன்னுடைய முடியை ரகசியமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார். சுமார் 16 வருடங்கள் அவர் தன்னுடைய முடியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சாப்பிட்டு வந்துள்ளது தெரியவந்தது.

இதைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில், வயிற்றுப் பகுதியில் அதிகளவு முடி சேர்ந்ததால், அந்தப் பெண்ணால் உணவு கூட சாப்பிட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதால், அவர் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.