அக்டோபர் 07, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஒருவருடன் காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்தி அவரிடம் இருந்து நமக்குத் தேவையான ரகசிய தகவல்களைப் பெறுவதற்கு ஹனி ட்ராப் (Honey Trap) என்று பெயர். தற்போது பெரும்பாலான ஹனி ட்ராப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக செய்யப்படுகின்றன. அந்த வகையில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹனி ட்ராப் சம்பவம் நடந்துள்ளது. Ratan Tata Hospitalised: ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்? இப்போது எப்படி இருக்கிறார்?!
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் 27 வயதினை உடைய பெண் ஹனி டிராப் மோசடி செய்து வருகிறார். அதாவது நன்கு வசதி வாய்ந்த ஆண்களை கூறி வைத்து அவர்களின் தனியாக வரவைத்து அவர்களுடன் நிர்வாண புகைப்படம் எடுத்து வருகிறார். பின்னர் அவரின் சொந்தக்காரர்களையும் அங்கு வர வைத்து அவரினை அசிங்கப்படுத்துகிறார். மேலும் தாம் கேட்கும் பணத்தினை கொடுக்காவிட்டால் நிர்வாண புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் என மிரட்டுகிறார். இதற்குப் பயந்து பலர் அவருக்கு பணத்தினை வாரி வழங்கி வந்தனர். இந்நிலையில் இந்த மோசடி கும்பலினை சேர்ந்த 27 வயது பெண்ணினை விசாகப்பட்டின காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.