தலைமுடியை வெட்ட சொன்னதால் ஆத்திரம்.. பள்ளி முதல்வர் கத்தியால் குத்திக்கொலை..!
ஹரியானாவில 2 மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 10, ஹிசார் (Haryana News): ஹரியானா மாநிலம், ஹிசாரில் (Hisar) உள்ள நார்னாண்ட் நகரத்தின் பாஸ் கிராமத்தில் கர்தார் நினைவுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களை, பள்ளி முதல்வர் தலைமுடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள், இன்று (ஜூலை 10) பள்ளி முதல்வரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். Pune: லாட்ஜில் 28 வயது டாக்டரை சீரழித்த இளைஞர்.. போதை மருந்து கொடுத்து பயங்கரம்.!
போலீஸ் விசாரணை:
இதுகுறித்து, தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பள்ளி முதல்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், தலைமுடியை வெட்ட சொன்னதால் 2 சிறார்கள், தங்கள் பள்ளி முதல்வரை கத்தியால் குத்திக் கொன்றதாக (Murder) தெரியவந்தது. இதுகுறித்து, ஹன்சி காவல் கண்காணிப்பாளர் அமித் யஷ்வர்தன் கூறுகையில், 2 சிறுவர்களும் பள்ளி முதல்வர் மீது கோபமாக இருந்ததால், இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மைனர் என்பதால், இன்னும் கைது செய்யபடவில்லை எனவும் அவர் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 10, 2025 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

