அக்டோபர் 19, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஜங்கான் (Jangaon) மாவட்டத்தில் உள்ள ஜனகாம நகரில் 2 வாலிபர்கள் டிரைவிங் (Car Driving) கற்றுக்கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் இருக்கையில் இருந்த வாலிபர் பதட்டத்தில் காரை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த குளத்தில் (Pond) பாய்ந்தது. Bomb Threat: அவசர அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்.. மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!
இதனையடுத்து, இருவரும் காரின் ஜன்னல் வழியாக நீரில் குதித்தனர். இதனை கவனித்த பொதுமக்கள் சிலர் குளத்தில் குதித்து அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தனர். இதன்பின்னர், கிரேன் உதவியுடன் நீரில் மிதந்த கார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் பாய்ந்த கார்:
Driving Lesson Mishap: Car Plunges Into Pond After Driver Hits Accelerator Instead of Brake
A driving lesson near Bathukamma Pond in Jangaon took an unexpected turn when a car plunged into the water after the driver accidentally stepped on the accelerator instead of the brake.… pic.twitter.com/DRY7sLuB5P
— Sudhakar Udumula (@sudhakarudumula) October 19, 2024