Vistara Flight Logo | Bomb File Pic (Photo Credit: Wikipedia | Pixabay)

அக்டோபர் 19, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனுக்கு (London) புறப்பட்டுச் சென்ற விஸ்தாரா (Vistara Airline) விமானத்துக்கு இன்று (அக்டோபர் 19) வெடிகுண்டு மிரட்டல் (Bomb) விடுக்கப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்ததுள்ளது. Free Dialysis Services: இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை.. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு..!

இதனையடுத்து, உடனடியாக பிராங்பர்ட் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பிராங்பர்ட் விமான நிலையத்துக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. தீவிர பரிசோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை, அது போலியான செய்து என்பது உறுதியானது. இதன்பின்னர், விமானம் இரண்டரை மணிநேரம் தாமதமாக லண்டனுக்கு புறப்பட்டது. கடந்த சில நாட்களாவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இன்று (அக்டோபர் 19) மட்டுமே 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.