Abuse (Photo Credit: Pixabay)

ஜனவரி 25, செபஹிஜலா (Tripura News): திரிபுரா மாநிலம், செபஹிஜலா (Sipahijala District) மாவட்டத்தில் உள்ள பிசால்கர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டின் அருகில் இருந்த சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை அவர் திரும்பி செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 20 பெண்கள், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை வீட்டின் வெளியே தரதரவென இழுத்து வந்து, அவரின் பாதி முடியை மொட்டை அடித்துள்ளனர். Viral Video: கைக்குழந்தையுடன் குழியில் தவறி விழுந்த பெண்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

பாதி மொட்டை அடித்து சித்ரவதை:

இதுதொடர்பாக தகவலறிந்து வந்த பிஷல்கர் மகளிர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், சம்பவத்தின் போது நான் சமயலறையில் இருந்தேன். அப்போது சுமார் 20 பெண்கள் எனது வீட்டிற்கு வந்து என்னுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, என் கணவர் வீட்டில் இல்லை. இச்சம்பவம் நடந்தபோது சில ஆண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. கடனாக வாங்கிய பணத்தை ஒரே நாளில் திருப்பிசெலுத்துமாறு அடித்து துன்புறுத்தினர். என்னால் உடனடியாக திரும்பி கொடுக்க முடியவில்லை. என்று தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.