
மார்ச் 06, ஐதராபாத் (Telangana News): அமெரிக்காவில், விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில், இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரவீன் (வயது 27) என்ற மாணவர் உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் படித்து வந்த பிரவீன், கடந்த 2023ஆம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். Mother and Baby Dies: பிரசவத்தில் பெண் மருத்துவர், குழந்தை பலி.. சோக சம்பவம்..!
இந்திய மாணவர் சுட்டுக்கொலை:
இந்நிலையில், பிரவீன் அங்குள்ள ஸ்டோரில் மர்ம நபர்களால் (Shot Dead) சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை என்றும், பிரதே பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே உண்மை தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சோகத்தில் மூழ்கிய குடும்பம்:
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சோகத்தில் மூழ்கினர். கடந்த 4 மாதங்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாணவர் குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை:
అమెరికాలో కాల్పులు.. తెలంగాణ విద్యార్థి మృతి
రంగారెడ్డి జిల్లా కేశంపేటకు చెందిన గంప ప్రవీణ్ (27) MS చదివేందుకు అమెరికా వెళ్లి అక్కడ విస్కాన్సిన్ మిల్వాకీలో నివాసం ఉంటున్నాడు
అయితే అతడి ఇంటికి సమీపంలోని బీచ్లో ఓ దుండగుడు జరిపిన కాల్పుల్లో ప్రవీణ్ మరణించాడు
దీంతో తీవ్ర విషాదంలో… pic.twitter.com/Zp03WI5MRh
— Telugu Scribe (@TeluguScribe) March 6, 2025