Crime Murder (Photo Credit: Pixabay)

மே 28, கௌசாம்பி (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கௌசாம்பி மாவட்டம் பராய் கிராமத்தில் வசித்து வருபவர் சவாரி தேவி (வயது 65). இவருக்கும் 45 வயதுடைய தினேஷ் குமார் என்ற நபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் தனது கள்ளக்காதலியை உல்லாசமாக இருக்க அழைப்பு கொடுத்துள்ளார்.

உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்ததால் கொலை :

அப்போது அவருக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் ஆத்திரமடைந்தவர், தேவியை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். மேலும் கழுத்தில் துணியை இறுக்கி இந்த கொடூர சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கடந்த மே 25ஆம் தேதி இவர்களின் வீட்டில் எந்த விதமான நடமாட்டமும் இல்லாததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் வந்து பார்த்தபோது சவாரி தேவி சடலமாக மீட்கப்பட்டார். அதனை தொடர்ந்து விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. Liquor Price Hike: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி.. மதுபான வகைகளின் விலை அதிரடி உயர்வு.! 

கள்ளக்காதல் வலையில் வீழ்த்தி கைவரிசை :

45 வயதுடைய தினேஷ் குமார், குடும்ப பிரச்சினையால் தனியாக வசித்து வந்த தேவிக்கு தேவையான சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார். அவர் 6 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லாமல் இருந்ததால் கணவரும் கைவிட்டு சென்று தனியே வாழ்ந்து வந்தார். தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு உதவி செய்வது போல பழக்கத்தை ஏற்படுத்திய தினேஷ், பின்னாளில் அவரை கள்ளக்காதல் வலையிலும் வீழ்த்தி இருக்கிறார் என்பது அம்பலமானது.