AUS Vs BAN Highlights (Photo Credit: @ESPNcricinfo X)

ஜூன் 21, ஆண்டிகுவா (Sports News): ஐசிசி டி20 உலகக்கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் (AUS Vs BAN) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ரன்களை அடித்தது. Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம்.. முன்பே கணித்த உயர் அதிகாரி.. அரசியல் கட்சிகளின் தலையீடா?.!

வங்காளதேச அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 100 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால், ஆஸ்திரேலியா அணி டிஎல்எஸ் (DLS Method) முறைப்படி, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் வார்னர் 53 ரன்கள் அடித்தார். ஆட்டநாயகன் விருதை பேட் கம்மின்ஸ் பெற்று சென்றார்.