Car-Bus Accident in Buldhana (Photo Credit: @ians_india X)

ஏப்ரல் 02, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் ஷேகான்-காம்கான் நெடுஞ்சாலையில் (Shegaon-Khamgaon Highway) வேகமாக வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதி (Car-Bus Accident) விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்தில், பின்னால் இருந்து வந்த தனியார் பயணிகள் பேருந்து, ஏற்கனவே சேதமடைந்த வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. Bangalore Teacher: மாணவரின் தந்தையுடன் கள்ளக்காதல்.. பெண் ஆசிரியையின் சேட்டை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.!

சாலை விபத்து:

மூன்று வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு:

இதுகுறித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்ததால், நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.