ஜூலை 15, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரின் ஆல் பகுதியில் இருந்து வேன் ஒன்று தோடா நகர பகுதிக்கு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். தோடா மாவட்டத்தில் உள்ள பாரத்-பாக்லா சாலையில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து (Accident) விபத்துக்குள்ளானது. பேராசிரியரின் பாலியல் தொல்லை.. கல்லூரியில் தீக்குளித்து உயிருக்கு போராடிய மாணவி மரணம்.!
5 பேர் பலி:
இதில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே, அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தகவல் அறிந்து மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதன்பின்னர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பலரின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில், அதிவேகமாக வேனை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.