Odisha Student Self Immolation (Photo Credit : @sardesairajdeep X)

ஜூலை 15, ஒடிசா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பேராசிரியரின் செயல்கள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் ஜூலை 1-ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். மாணவியின் புகார் குறித்து உரிய விசாரணை நடத்த நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என ஆசிரியர் சமீர்குமார் சாஹியும் மறுத்துள்ளார்.

பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மாணவி :

ஒரு வாரத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகம் உறுதியளித்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி மாணவர்கள் கடந்த ஜூலை 12-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென முதல்வரின் அலுவலகத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றி மாணவி தீக்குளித்தார். இந்த சம்பவத்தில் மாணவி படுகாயமடைந்த நிலையில், அவர் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Trending Video: ஹெல்மெட்டில் சிசிடிவி.. உயிருக்கு பயந்து கேமராவுடன் திரியும் நபரின் வீடியோ வைரல்.! 

3 நாட்களுக்கு உயிருக்கு போராடிய சோகம் :

95% தீக்காயங்களுடன் மாணவி கவலைக்கிடமாக இருந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மாணவி மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தற்போது கல்லூரி துறை தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

மாணவி தீக்குளித்தபின் உயிருக்கு போராடிய வீடியோ :