Girl Friend Murder in UP (Photo Credit: @TrueStoryUP X)

மே 23, பிஜ்னோர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோரில் (Bijnor) உள்ள சுஹாக்பூரைச் சேர்ந்தவர் சிவம். இவர், ருச்சிகா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். சிவம், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், ருச்சிகா தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் அரசாங்க வேலையில் பணிபுரிய வேண்டும் என நிபந்தனை விதித்தார். இதனால், சிவம் காவல்துறை பணியில் சேர பலமுறை முயற்சி செய்தார். ஆனால், அவர் அதில் தேர்ச்சி பெறவில்லை. வாலிபரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து கொடூர தாக்குதல்.. காதலி குடும்பத்தினர் வெறிச்செயல்..!

கழுத்து நெரித்து கொலை:

இதனிடையே, ருச்சிகாவுக்கு ஒரு தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையறிந்த அவரது காதலன் சிவம், கடைசியாக ஒருமுறை உன்னை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த மே 10ஆம் தேதி அன்று, சிவம் ருச்சிகாவை ஆர்.எஸ்.எம் கல்லூரிக்கு அழைத்து அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிவம் திருமணம் பற்றி பேசியபோது, ​​ருச்சிகா திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த சிவம், காதலியின் கழுத்தை நெரித்து (Murder) கொன்றார்.

மூவர் கைது:

இதனையடுத்து, சிவம் தனது காதலியின் உடலை உயிருடன் இருப்பது போல் பைக்கில் உட்கார வைத்தார். அவரது தாயார் பைக்கில் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். பின்னர், அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த விசாரணையில், சிவம் மற்றும் அவரது தந்தை ரிஷிபால், தாய் சுமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.