Bigg Boss Kannada Season 12 Shutdown (Photo Credit : Wikipedia / @PTI_News X)

அக்டோபர் 08, பெங்களூரு (Bengaluru News): தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 9ல் விஜே பார்வதி, ரம்யா ஜோ, விக்ரம், வாட்டர் மெலன் ஸ்டார் என அறியப்படும் திவாகர், அகோரி கலையரசன் உட்பட பலரும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். கடந்த 8 சீசன்கள் போல அல்லாமல் 9-வது சீசன் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. முதல் நாளிலேயே வாட்டர் மெலன் ஸ்டார் பஞ்சாயத்தை கூட்டிய நிலையில், வரும் நாட்களில் இன்னும் பரபரப்பாக போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவு (Bigg Boss Season 12 Shutdown):

அதேபோல கன்னடத்திலும் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 12 தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வரும் நிலையில், கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது. கன்னட பிக் பாஸ் டிஆர்பியிலும் அதிக ரேட்டிங் கொண்டுள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்து வந்ததால் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவிட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ராம்நகர் மாவட்டம் பிடரியில் ஜாலி ஸ்டூடியோவில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. Bigg Boss Tamil Season 9: வாட்டர் மெலன் ஸ்டாரை அடிக்க கை ஓங்கிய எப்ஜெ.. பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து தாக்க முயற்சி.. பிக்பாஸ் வீட்டில் கலவரம்.!

கழிவு நீர் போக வடிகால் இல்லை என புகார் :

இதனிடையே ஸ்டூடியோவில் இருந்து நீர் மேலாண்மை மேற்கொள்ளுதல் மற்றும் கழிவு நீர் அகற்றுவதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்துள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவுகள் ஸ்டூடியோ வளாகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், கழிவு நீரை வெளியேற்றுவதற்கான வடிகால் இணைப்புகள் இல்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதனால் தயாரிப்பு நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்கும் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி பணிகளை நிறுத்துமாறும், ஸ்டுடியோவை இழுத்து மூடுமாறும் மாச கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 போட்டியாளர்களும் வெளியேற்றப்பட்டு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டுடியோவுக்கு சீல் வாய்த்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் :