அக்டோபர் 16, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்த காதல் திருமணம் சோகத்தில் முடிந்தது. 22 வயதான ரவிதா, ராகேஷ் (வயது 25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு, வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, பிரயாக்ராஜில் ஒன்றாக வசித்து வந்தனர். Sex With Wife Above 16 Years: 16 வயது மனைவியுடன் உடலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
மனைவி கொலை:
இந்நிலையில், நேற்று முன்தினம் (அக்டோபர் 14) கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு (Family Dispute) ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராகேஷ் தனது காதல் மனைவி ரவிதாவைக் கொன்று (Murder Case), அவரது உடலை ஒரு குளத்தின் அருகே உள்ள சேற்றில் புதைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைகார கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.