டிசம்பர் 05, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் நெப் சராய் (Neb Sarai) பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவரது தந்தை ராஜேஷ் குமார் (வயது 51), தாய் கோமல் (வயது 46) மற்றும் சகோதரி கவிதா ஆகிய 3 பேரும் நேற்று (டிசம்பர் 04) அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் படுகொலை (Murder) செய்யப்பட்டனர். இச்சம்பவம் நடந்த போது நடைபயிற்சிக்காக தான் வெளியே சென்றிருந்ததாக அர்ஜுன் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். Family Murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை.. அதிகாலையில் நேர்ந்த துயர சம்பவம்..!
புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில், வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்ததற்கான எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர், அர்ஜுனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் இதுகுறித்த விசாரணையில், அர்ஜுனுடைய தந்தை, அவரை அடிக்கடி திட்டி வந்ததாலும், சகோதரியுடன் ஏற்பட்ட சண்டையினாலும் அவர்களைக் கொலை செய்ய அர்ஜுன் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, பெற்றோரின் திருமண நாளான நேற்று, தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை கத்தியை வைத்து சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அர்ஜுனை கைது செய்து காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.