Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

மார்ச் 10, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், சித்தி (Sidhi) மாவட்டத்தில் இருந்து பஹ்ரியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல, மைஹாரை நோக்கி சரக்கு வாகனத்தில் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலை 2.30 மணியளவில் லாரியும், சரக்கு வாகனமும் மோதி விபத்து (Accident) ஏற்பட்டது. Manipur Violence: மீண்டும் வெடித்த வன்முறை.. பாதுகாப்பு படையினருடன் குக்கி மக்கள் மோதல்.. மணிப்பூரில் பதற்றம்..!

விபத்தில் 7 பேர் பலி:

இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய ஒத்துனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.