
மார்ச் 10, இம்பால் (Manipur News): மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் (Imphal), 2023ஆம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்து, பெரும் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரயில் பயணத்தில் அதிர்ச்சி.. பெண்ணை 30 நிமிடம் ஆபாசமாக வீடியோ எடுத்த ஆசாமி.. அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவி.!
முதல்வர் ராஜினாமா:
இந்நிலையில், சுமார் 50000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தொடர் வன்முறை (Violence) சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் (Biren Singh) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் கலவரம்:
மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பும் சூழலை ஏற்படுத்தும் வகையில், நேற்று (மார்ச் 09) முதல் மாநிலம் முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைக்காமல், போக்குவரத்து அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று பேருந்துகள் இயங்க தொடங்கின. குக்கி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. காங்போக்பி மற்றும் சேனாபதி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி, போக்குவரத்தை நிறுத்த முயற்சி செய்தனர். குக்கி இன பெண்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் மீது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் குக்கி மக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.