ஆகஸ்ட் 12, ஜெகனாபாத் (Bihar News): பீகார் மாநிலம், ஜெகனாபாத் (Jehanabad) மாவட்டத்தில் உள்ள பாபா சித்தாந்த் கோயிலில் (Baba Siddhanth Temple) ஆண்டுதோறும் புனித ஷ்ராவண் மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே கோயிலில் குவியத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் (Stampede) 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. Married Woman Gang Raped: காதல் விவகாரத்தில், இளைஞரின் சகோதரி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!
இதன் முதற்கட்ட தகவலின்படி, கன்வாரியாக்களுக்கு இடையே ஏதோ பிரச்சனையில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு நெரிசலுக்கு வழிவகுத்தது என்று மாவட்ட நீதிபதி அலங்கிரிதா பாண்டே தெரிவித்துள்ளார்.
VIDEO | Seven dead and 50 feared injured as a stampede occurred at a temple of Bihar's Jehanabad after a fight broke between flower seller and people.
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/psJSERP7ra
— Press Trust of India (@PTI_News) August 12, 2024