Wall Collapse in Hyderabad (Photo Credit: @TeluguScribe X)

மே 08, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இங்கு உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் (Construction Works) ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி 40 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றாக குடிசையில் தங்கியுள்ளனர். Minor Girl Gang Rape: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நேர்ந்த சம்பவம்..!

நேற்று இரவு 8.30 மணிக்கு அங்கு கனமழை பெய்தது. இதில், மழை நீர் செல்ல வழியில்லாமல் தடுப்புச்சுவர் அருகே தேங்கி நின்றுள்ளது. அப்போது, திடீரென தடுப்புச்சுவர் இவர்கள் தங்கிருந்த குடிசையின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில், 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கண்டறிந்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.