மே 08, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அதிகமான நேரத்தை இன்ஸ்டாகிராமில் (Instagram) செலவிட்டுள்ளார். இதன்மூலம் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், நெருக்கமான நட்புறவில் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று சிறுமியை அந்த வாலிபர் அவரது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர், அந்த சிறுமியிடம் நைசாக பேசி அவரை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். Benefits Of Turmeric: கோடை வெயிலில் வறண்ட சருமத்தை பாதுகாக்க மஞ்சள் எப்படி உதவுகிறது..? விவரம் உள்ளே..! 

இதனையடுத்து, கடந்த 4-ஆம் தேதி மறுபடியும் அந்த சிறுமியை வீட்டிற்கு வரவழைத்து, இந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின்னர், பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த நிலையில், இவர்கள் இருவர் மீதும் சிறுமி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், அவர்கள் மேல் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், அவர்கள் இருவரும் பால்கர் மாவட்டத்தில் உள்ள தலசேரி பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வருகின்ற 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.