Road Accident (Photo Credit: Pixabay)

ஜனவரி 13, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் (Nashik) 16 பேரை ஏற்றிச் சென்ற டெம்போ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி மீது மோதி (Accident) விபத்துக்குள்ளானது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். அணைக்கட்டில் செல்பி எடுத்து குளியல், கொண்டாட்டம்.. நண்பர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி.! பெற்றோர்கள் கண்ணீர்.!

சாலை விபத்து:

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அவர்கள் ஒரு மத நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, லாரி மீது மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது என கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.