Konda Pochamma Sagar Reservoir 5 Friends Dies (Photo Credit: @TeluguScribe X)

ஜனவரி 12, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில், கொண்டபோச்சம்மா சாகர் (Konda Pochamma Sagar Reservoir) நீர்த்தேக்கம் உள்ளது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு, ஹைதராபாத் பகுதியில் உள்ள முஷீராபாத் பகுதியில் வசித்து வரும் 7 நபர்கள், நீர்தேக்கத்திற்கு குழுவாக சென்றுள்ளனர். இவர்கள் நீர்தேக்கத்திற்குள் இருந்த நீரில் இறங்கி விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. Newborn Baby Killed: கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்; பச்சிளம் பிஞ்சை 23 வயது இளம்பெண்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..! 

செல்பி எடுக்கும்போது சோகம்:

அனைவரும் நீரில் விளையாடியபடி செல்பி எடுத்து மகிழ்ந்தபோது இந்த சோகம் நடந்த நிலையில், நீரில் இறங்கிய ஐவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மீட்புப்படையினர் சேர்ந்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மொத்தமாக 7 பேர் சேர்ந்து நீர்தேக்கத்திற்கு சென்று இருந்த நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் தப்பித்துக்கொண்டனர்.

உயிரிழந்தவர்களின் விபரம்:

காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்தவர்களாக முஷீராபாத் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் நரசிங்கின் மகன் தனுஷ் (வயது 20), தனுஷின் சகோதரர் லோஹித் (வயது 17), காவடுகுடா கிராமத்தை சேர்ந்த கிஷனின் மகன் சிகலாட்டா தினேஸ்வர் (வயது 17), தீபக் சுதாரின் மகன் சாஹில் (வயது 19), கைரகாபாத் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்தின் மகன் ஜிதின் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராம் நகரைச் சேர்ந்த வேணுகோபாலின் மகன் கோமாரி மரிங்க், முகமது ஹாசனின் மகன் முகம்மது இப்ராஹிம் (வயது 20) ஆகியோர் உயிர்பிழைத்தனர்.

5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான விபரம் தொடர்பான காணொளி: