Dead Body (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 28, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கன்சோலியில் உள்ள நவி மும்பையில் (Navi Mumbai) மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பிப்ரவரி 25ஆம் தேதி, கோபோலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு (Theme Park) கல்வி சுற்றுலா சென்றிருந்தனர். இதில், ​​எட்டாம் வகுப்பு மாணவர் ஆயுஷ் தர்மேந்திர சிங் (வயது 14), திடீரென தரையில் சரிந்து விழுந்தார். Maha Kumbh Mela 2025: 75 ஆயிரம் காவலர்களுக்கு போனஸ், பதக்கம், 7 நாள் விடுப்பு.. முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு..!

சிறுவன் பலி:

உடனே மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன், பூங்காவிற்குள் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு மாணவரை கொண்டு சேர்த்தனர். பின்னர், அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, அரசு மருத்துவ அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. அதில், சிறுவன் மாரடைப்பால் (Heart Attack) உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, காலாப்பூர் காவல்துறையினர் விபத்து மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.