செப்டம்பர் 02, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் (Kanpur) சகேரியில் உள்ள சிவகத்ராவில் காணாமல் போன கார் ஓட்டுநர் ரிஷிகேஷ் (வயது 22), ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், அவரது காதலியின் சகோதரர் பவன் மல்லா மற்றும் அவரது நண்பர்கள் பாபி, சத்யம், டோலி போன்றவர்களால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. Shocking Video: மேடையில் நடனமாடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்.!
போலீஸ் விசாரணை:
இதனையடுத்து, காவல்துறையினர் மோக்லி என்கிற பிரின்ஸ், நிகில், ஆகாஷ் மற்றும் ரிஷு வர்மா ஆகியோரை கைது செய்துள்ளனர். தற்போது, 4 முக்கிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மொத்தம் 14 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 'என் சகோதரியை காதலித்ததால், முதலில் அவரது கையை வெட்டி, பின்னர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று (Murder), உடலை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு சாக்குப்பையில் போட்டு ஆற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.