நவம்பர் 05, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) மிட்டாய் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (நவம்பர் 03) மாலை பர்ரா காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்ட பர்ரா ஜரௌலியில் நிகழ்ந்தது. ஃப்ரூடோலா என்ற 4 வயது சிறுவன் மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, இந்த கண் வடிவ ஒட்டும் டோஃபி (Toffee) மிட்டாய் தொண்டையில் சிக்கியது. Devotees Drink AC Water: "சத்யசோதனை டா.. சாமி.." சாமி தீர்த்தம் என நினைத்து ஏசி தண்ணீரை வரிசையில் குடித்த பக்தர்கள்..!
இதனால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. குழந்தையின் தொண்டையில் இருந்த மிட்டாயை அகற்ற அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீபாவளியை முன்னிட்டு விடுப்பில் சென்றதால், மருத்துவர்கள் யாரும் வரவில்லை என குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிறுவனை சுமார் 4 மருத்துவமனைகளில் சேர்த்தனர். ஆனால், அவர்களால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. தொண்டையில் மிட்டாய் சிக்கியதால் குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டோஃபி தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து, தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் உணவுத் துறைக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிட்டாய் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் பலி:
किंडरज्वॉय जैसी दिखने वाली फ्रूटोला टॉफी खाने के बाद 4 साल के बच्चे के गले में फंसने से मौत हो गई...।
किसी भी जिम्मेदार अफसर ने इस घटना का संज्ञान नहीं लिया। मेरी @DMKanpur से निवेदन है कि खाद्य विभाग से इस टॉफी की सैंपलिंग कराकर कार्रवाई करें...।https://t.co/4XeZZLKgLM pic.twitter.com/JDNuAbHOW1
— Dilip Singh (@dileepsinghlive) November 4, 2024