நவம்பர் 20, ராஞ்சி (Jharkhand News): ஜார்க்கண்ட் மாநில அரசின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 20 (இன்று) 2வது கட்டமாக தேர்தல் (Jharkhand Election) நடைபெறுகிறது. ஜார்க்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 81 சட்டசபைத் தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஜார்க்கண்டில் மொத்தம் 2.6 கோடி வேட்பாளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1.31 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.29 கோடி பேர், 11.84 லட்சம் வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். Maharashtra Election 2024: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவுகள்.!
வாக்குப்பதிவுக்காக 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 12,716 வாக்குச்சாவடிகள் கிராமப்பகுதியிலும், 2,628 வாக்குச்சாவடிகள் நகரப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. 81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13 ஆம்தேதி நிறைவடைந்தது. 2வது கட்டமாக இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் ராணுவப் பாதுக்காப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.