ஜூன் 15, அகமதாபாத் (Gujarat News): 2024-ஆம் ஆண்டில் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுகள் பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று இதற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பஞ்சமஹால் மாவட்டம், கோத்ரா நகரில் உள்ள ஜலாராம் பள்ளியின் பள்ளி முதல்வர் உட்பட 5 பேரை குஜராத் காவல்துறையினர் நீட்-யுஜி தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு உதவ முயன்றதாகக் கூறி கைது செய்துள்ளனர். Boat Sinks In Sea And 2 Fishermen Died: விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து; 2 பேர் உயிரிழப்பு..! ஒருவர் மாயம்..!
இந்த வழக்கில் பள்ளி ஆசிரியர் துஷார் பட், கல்வி ஆலோசகர் பரசுராம் ராய் மற்றும் பள்ளி முதல்வர் புர்ஷோத்தம் சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்டக் கல்வி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து துஷார் பட்டின் தொலைபேசியை பறிமுதல் செய்து விசாரணைக்கு உட்படுத்தினார். அதில், சுமார் 30 மாணவர்களின் பட்டியலைக் கண்டுபிடித்தனர். மேலும், அவரது காரில் இருந்து ரூ.7 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் மீட்டனர்.
இதனையடுத்து, பரசுராம் ராயை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து சுமார் ரூ.2.30 கோடி மதிப்புள்ள 8 வெற்று காசோலைகளை பறிமுதல் செய்தனர். இதற்கு, ஜலாராம் பள்ளியில் நீட்-யுஜி தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் பல காசோலைகளில் கையெழுத்திட்டதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.