Old Man Murder in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 18, மொராதாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் (Moradabad) மாவட்டத்தின் குந்தர்கியின் ஹரியானா கிராமத்தை சேர்ந்தவர் தந்திரிக் குலாப் சிங் சைனி (வயது 60). இவர், மாந்திரீக பூஜைகள் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த காமினி என்ற இளம்பெண்ணுக்கு மாந்திரீக சிகிச்சை அளித்திருந்தார். சிகிச்சையின் போது, அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் காமினியின் சகோதரர் சஞ்சீவ், தனது தங்கையின் மரணத்திற்கு காரணமாக குலாப் சிங் சைனியை அவரது வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்தார்.  Viral Video: இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

முதியவர் கொடூர கொலை:

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில், அவரது மார்பு, கை மற்றும் கால்களில் அடித்து, அந்தரங்க உறுப்பை கொடூரமாக தாக்கி கொலை (Murder) செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.