Youth Attacks Constable (Photo Credit: @ChotaNewsApp X)

மார்ச் 26, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் (Banjara Hills), நேற்று (மார்ச் 25) டோலிச்சாக்கியில் இருந்து அதிவேகத்தில் தனது பைக்கை ஓட்டிச் சென்ற காஜா என்ற பைக் பந்தய வீரர், ஒமேகா மருத்துவமனைகள் சாலையில் ஒரு கார் மீது மோதினார். விபத்து நடந்த உடனேயே, கார் ஓட்டுநருக்கும் காஜா என்ற வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். Heart Wrenching Video: மனமெல்லாம் பதறுதே.. 12 சிசுக்களின் சடலம் கண்ணாடி பாட்டிலில் கண்டெடுப்பு.. குப்பையுடன் குப்பையாக அவலம்.!

காவலரை தாக்கிய வாலிபர்:

அப்போது, பணியில் இருந்த பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலைய கான்ஸ்டபிள் ஸ்ரீகாந்த், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அந்த வாலிபர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். மேலும், அருகிலிருந்த பீர் பாட்டிலை எடுத்து கான்ஸ்டபிளைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இரண்டு கிலோமீட்டர் தூரம் அவரைத் துரத்திச் சென்ற கான்ஸ்டபிள் ஸ்ரீகாந்த், மடக்கி பிடித்தார்.

வாலிபர் கைது:

பின், இதுதொடர்பாக கான்ஸ்டபிள் ஸ்ரீகாந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காயமடைந்த ஸ்ரீகாந்த் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அந்த வாலிபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், தாக்குதலை நடத்தியபோது மது போதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: