Corpse of 12 Infants in Pune Case (Photo Credit: @Pune_First X)

மார்ச் 25, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, போராக், டவுன்ட் நகரில் இருக்கும் ஒதுக்குபுறமான பகுதியில், சம்பவத்தன்று கண்ணாடி பாட்டில்களில் மருத்துவ கழிவுகள் அடைக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. கண்ணாடி பாட்டிலை சோதிக்கையில், அதில் பச்சிளம் சிசுக்களின் சடலம் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தினை ஆய்வு செய்தனர். Chains Snatch: ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. சென்னையை அலறவிட்ட கும்பல்..!

காவல்துறையினர் தீவிர விசாரணை:

அப்போது, மருத்துவ கழிவுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சிசுக்களின் சடலம், மொத்தமாக 12 பாட்டிலில் இருப்பது தெரியவந்தது. இது மருத்துவ கழிவுகளா? அல்லது யாரேனும் அரசுக்கு தெரியாமல் ஏதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாரா? என்ன நடந்தது? யார் அவர்களின் உடலை இங்கே கொண்டு வந்தது? என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி, காண்போரை பதற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணை நடக்கிறது.

குப்பைகளில் இருந்து மீட்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள்: